மதுபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஆடவர்; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Man, 22, charged with breaking into NTU dorm
Pic: Today

சிங்கப்பூரில் லிம் சீ யோங் என்ற 45 வயது ஆடவர் கடந்த 2020ஆம் ஆண்டு சிலேத்தார் விரைவுச்சாலையில் குடித்து விட்டு, தூக்க கலக்கத்தில் டாக்சியை ஓட்டிச் சென்று சாலையில் சென்ற மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

இந்த விபத்தில், லிம் சென்று மோதிய வாகனத்தின் ஓட்டுனருக்கு கழுத்து, மேல் முதுகு, இடது தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

சுமார் 1,500 ஊழியர்களை பணியமர்த்த உள்ள சிங்கப்பூரின் OCBC வங்கி!

ஆனால், வாகனத்தின் மீது டாக்சி மோதியதை ஒப்புக்கொள்ளாமல் சம்பவ இடத்திலிருந்து லிம் புறப்பட்டு விட்டார்

இந்நிலையில், மதுபோதை மற்றும் தூக்க கலக்கத்தில் டாக்சியை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியதற்காக லிம் சீ யோங்கிற்கு 12 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் வாகனம் ஓட்டுவதற்கு சுமார் 4 ஆண்டுகள் தடையும், 800 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

துவாஸ் வெடிப்பில் உயிரிழந்த 3 வெளிநாட்டு ஊழியர்கள்… விதிகள் மீறப்பட்டது தான் காரணம் – அறிக்கை