முதலாளியிடம் பணத்தைத் திருடிய ஊழியர்.. வெளிநாட்டுக்கு தப்பிக்க முயற்சி – வளைத்து பிடித்த போலீஸ்

(Photo: TODAY)

முதலாளியின் கார்களில் இருந்து S$57,000 பணத்தைத் திருடிய ஊழியர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஊழியர் தன்னை அச்சுறுத்த முயற்சிப்பதாக உணர்ந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த அந்த முதலாளி, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 10, அன்று காவல்துறையில் புகார் அளித்தார்.

பலத்த சத்தம்.. கீழே விழுந்த பெண் மற்றும் ஒரு வயது குழந்தை – சம்பவ இடத்திலேயே மரணம்

அதனை அடுத்து 27 வயதான ஓங் ஜியா லீ என்ற அந்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

அப்படி அவர் என்ன ரகசியத்தை வைத்து மிரட்டினார் என்பது பற்றிய விவரங்கள் நீதிமன்றம் வெளியிடவில்லை.

ஓங் தனது திருட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டார், இந்நிலையில் இன்று திங்களன்று அவருக்கு எட்டு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

38 வயதான ஆஸ்திரேலிய முதலாளிக்கு ஓங் ஓட்டுநர் மற்றும் தனிப்பட்ட உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

செப்டம்பர் 10, 2022 அன்று கார்களில் இருந்த மொத்தம் S$57,000 பணத்தை அவர் திருடியதாக கூறப்பட்டுள்ளது.

அதன்பிறகு, சிங்கப்பூரில் இருந்து வியட்நாமில் உள்ள ஹனோய் செல்ல விமான டிக்கெட்டை அவர் முன்பதிவு செய்தார்.

“ஓட்டுநர் வேலைக்கு வரவில்லை, மேலும் அவர் என் மனைவி கைப்பேசி எண்ணை ப்ளாக் செய்துவிட்டு, எனது அழைப்புகளையும் எடுக்கவில்லை” என்று முதலாளி காவல்துறையிடம் கூறினார்.

பின்னர் என்னை மன்னித்து விடுங்கள் என்று முதலாளிக்கு ஊழியர் செய்தி அனுப்பியுள்ளார். மேலும், ‘உங்கள் ரகசியங்கள் என்னிடம் பத்திரமாக உள்ளன’ என்றும் அந்த செய்தியில் அவர் கூறியுள்ளார்.

நீங்கள் (முதலாளி) காவல்துறையிடம் சென்றால், அந்த ரகசியங்களை வெளியிடுவேன் என அவர் மிரட்டுவதாக கருதுகிறேன் என முதலாளி கூறினார்.

அடுத்து என்ன நடந்தது என்ற விவரங்களை நீதிமன்றம் குறிப்பிடவில்லை, ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஓங் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் அவர் ஆஸ்திரேலிய முதலாளிக்கு முழு இழப்பீடு தொகையையும் திருப்பி செலுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

PM Lee: பொதுத் தேர்தலுக்கு முன்பே பிரதமர் பொறுப்பை ஒப்படைக்கவிருக்கும் பிரதமர் லீ