போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கையில் 89 சந்தேக நபர்கள் கைது

Drug CNB arrested
(Photo: Central Narcotics Bureau)

சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பான சந்தேக நபர்கள் மொத்தம் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) தெரிவித்துள்ளது.

தீவு முழுவதும் கடந்த ஜனவரி 11 முதல் ஜனவரி 15 வரை மேற்கொண்ட அதிரடி சோதனையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

நிற்காமல் சென்ற கார்.. துரத்தி பிடித்த காவல்துறை – உரிமம் இல்லாத ஓட்டுநர் கைது!

இதில் கைது செய்யப்பட்டவர்களில் மிக சிறிய வயது நபர் 16 வயது பெண், அவர் சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் பயன்படுத்துபவர் என்றும் அது கூறியுள்ளது.

அவர்களிடம் இருந்து ஹெராயின், கஞ்சா போன்ற போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், அதன் மதிப்பு S$15,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில், சாய் சீ (Chai Chee), சோவா சூ காங் ((Choa Chu Kang), தோ பாயோ (Toa Payoh) மற்றும் உட்லேண்ட்ஸ் (Woodlands) உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கையில், கெல்லாக் ரோட்டில் (Kellock Road) ஒருவர் கைது செய்யப்பட்டார், அவரிடம் போதைப்பொருள், ரொக்கம் மற்றும் கத்தி போன்றவை கைப்பற்றப்பட்டது.

அனைத்து சந்தேக நபர்களிடமும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சிங்கப்பூரில் ஐந்தில் இரு ஊழியர்களுக்கு வேலையிட பாலியல் தொல்லை – ஆய்வு

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…