சிங்கப்பூரில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனை நடவடிக்கையில் 8 பேர் கைது..!

Drugs hidden in papaya seized, eight arrested in CNB operation
Drugs hidden in papaya seized, eight arrested in CNB operation (Photo: CNB)

சிங்கப்பூரில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனை நடவடிக்கையில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் S$120,000க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பலவகையான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு (CNB) ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : தங்கும் விடுதிகளுக்கு உரிய அனுமதி இல்லாமல் மதுபானம், சிகரெட் கொண்டு செல்வோர் மீது கடும் நடவடிக்கை..!

இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மதிப்பு சுமார் S$124,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பறிமுதல் செய்யப்பட்ட சில போதைப்பொருள்கள், பப்பாளிப் பழத்தின் உள்ளே மூன்று பொட்டலங்களாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் தொடர்பான சந்தேகத்தின் பேரில் 3 மலேசியர்கள் மற்றும் 5 சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அனைவரும் 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இதில் கைது செய்யப்பட்ட அனைவரிடமும், போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று CNB தெரிவித்துள்ளது.

இதில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருள், கிட்டத்தட்ட 215 போதைப்புழங்கிகள் சுமார் ஒரு வாரம் பயன்படுத்த போதுமானது என்றும் CNB தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியை அசுத்தமாக வைத்திருந்த விடுதி நடத்துனருக்கு அபராதம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…