சிங்கப்பூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் S$360,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் – 5 பேர் கைது..!

Drugs worth S$360,000 seized, 5 arrested in CNB raid
(Photo: Central Narcotics Bureau)

சிங்கப்பூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் S$360,000 மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இதில் 24 முதல் 33 வயதுக்குட்பட்ட ஐந்து ஆடவர்கள், அதாவது மூன்று மலேசியர்கள் மற்றும் இரண்டு சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க : உலகின் முதல் மிதக்கும் Apple ஸ்டோர் சிங்கப்பூரில்… திறக்கும் தேதி அறிவிப்பு..!

இந்த சோதனையின் போது, கத்திகள் மற்றும் S$19,865 ரொக்க பணமும் மீட்கப்பட்டதாக CNB தெரிவித்துள்ளது.

உட்லேண்ட்ஸ் ஸ்ட்ரீட் 32க்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பு பிரிவில் கடந்த திங்கள்கிழமை சோதனை தொடங்கியது, அங்கு போதைப்பொருள் மற்றும் S$15,350 ரொக்கம் கைப்பற்றப்பட்டன. மேலும், 25 வயதான மலேசியரும் கைது செய்யப்பட்டார்.

CNB அதிகாரிகளின் தனி பிரிவு, பாசீர் ரிஸ் ஸ்ட்ரீட் 12க்கு அருகிலுள்ள மற்றொரு குடியிருப்பு பிரிவில் சோதனை நடத்தியது, அதில் 25 வயதான மலேசியரை கைது செய்ததாக CNB தெரிவித்துள்ளது.

மற்றொரு பின்தொடர்தல் நடவடிக்கையில், மீண்டும் உட்லேண்ட்ஸ் ஸ்ட்ரீட் 32இல், 24 மற்றும் 33 வயதுடைய இரண்டு சிங்கப்பூரர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 40 மீட்டர் உயர கிரேனில் சிக்கிக்கொண்ட ஊழியர் மீட்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…