இந்தியாவில் உள்ள குழந்தைகளை பார்க்க முடியாமல் புற்றுநோயால் அவதிப்பட்ட தாய் – கடைசி ஆசையை நிறைவேற்றிய சிங்கப்பூர்

(Photo: Tan Tock Seng Hospital)

பலர் தங்கள் குழந்தைகளுக்காக இறக்கவும் தயாராக இருப்பதாக கூறுவர், ஆனால் தொண்டை புற்றுநோய் நோயாளி ராமமூர்த்தி ராஜேஸ்வரி அவர்களை காண வேண்டும் என்ற ஒற்றை ஆசையுடன் வாழ்ந்தார்.

மரணத்தின் விளிம்பில் தனது வாழ்க்கை இருந்த போதிலும், உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் பல தடைகளை தாண்டி அவர் தனது இரண்டு குழந்தைகளை காண இந்தியாவுக்கு விமானத்தில் ஏறினார்.

கடைசி ஆசை

ராஜேஸ்வரிக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகமானபோது, அவரது மகள் மற்றும் மகன் (அப்போது 12 மற்றும் ஒன்பது வயது) பராமரிப்புக்காக இந்தியாவில் உள்ள அவர்களின் குடும்பத்தாரிடம் ஜனவரி 2019ல் அனுப்பப்பட்டனர்.

இந்தியாவில் உள்ள தனது குழந்தைகளை பார்ப்பது தான் அவருடைய கடைசி ஆசை.

சிங்கப்பூர் நிரந்தரவாசியான அவர், எவ்வளவு காலம் உயிருடன் இருப்பார் என்ற தனது மருத்துவர்களின் மதிப்பீட்டை ஏற்கெனவே கடந்து விட்டார். அவர் இந்தியாவுக்கு வருவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத உடல் நிலையில் இருந்தார்.

வெளிநாட்டு ஊழியர் விடுதி உட்பட 2 குழுமங்கள் கண்காணிப்பில்… விடுதியில் மொத்தம் 237 பாதிப்புகள் பதிவு

உடல் பயணத்திற்கு ஒத்துழைப்பது கடினம்

உயிர் எப்போதும் வேண்டுமானும் போகும் என்ற நிலையில் வாழ்ந்துவந்த அவரின் உடல், விமானப் பயணத்திற்கு ஒத்துழைப்பது என்பது மிக கடினம் என்று டான் டொக் செங் மருத்துவமனை நினைத்தது.

அவர் எப்பொழுதும் தன் தொலைபேசியை கையில் வைத்து, இந்தியாவில் உள்ள தனது குடும்பங்கள், குழந்தைகளின் படங்களை பார்த்துக் கொண்டிருப்பார் என்று டாக்டர் யூங், துணை ஆலோசகர் கூறினார்.

பேசும் திறன் பறிபோனது

புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை காரணமாக அவரின் பேசும் திறன் பறிபோனது, அவரின் கடைசி ஆசை தன் குழந்தைகளை நேரில் காண வேண்டும் என்பதே என்றார் மருத்துவர் ஒருவர்.

அவருடைய உடல்நிலை மட்டும் இதற்கு தடையாக இல்லை. இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்புகள் நாடு முழுவதும் பரவி வந்தது. சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு விமானங்கள் குறைவாகவே இருந்தன.

ஏர் இந்தியா, சிங்கப்பூரின் சிவில் ஏவியேஷன் ஆணையம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உதவியுடன், விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே ராஜேஸ்வரி பறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அவர் திருச்சிக்கு செல்ல 48 மணி நேரத்திற்கு முன்பு தான் அனைத்து அனுமதியும் வழங்கப்பட்டது.

குழந்தைகளை சந்தித்தார்

இறுதியாக பல தடைகளை தாண்டி அவர் திருச்சி வந்தடைந்தார், பின்னர் ராஜேஸ்வரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர், ராஜேஸ்வரி மருத்துவமனையில் தன்னுடைய குழந்தைகளை இறுதியாக பார்த்தார். அது அவரின் கடைசி ஆசையும் கூட.

இது பற்றி அவரது கணவர் ராஜகோபாலன் அல்லது திரு மணி, மனைவி தங்கள் மகள் மற்றும் மகனைப் பார்த்த மகிழ்ச்சியை விவரித்தார்.

ராஜேஸ்வரியால் பேச முடியவில்லை ஆனால் சைகையை பயன்படுத்தி அவர்களுடன் பேசி மகிழ்ந்தார், என்றார்.

மரணம்

பின்னர், அவர் சொந்த ஊருக்குச் சென்ற இரண்டு வாரங்களில், 2020ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி அன்று உயிரிழந்தார்.

தமது மனைவியின் பயணத்திற்கு உதவிய அனைவருக்கும், மேலும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் திரு. மணி நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

சிங்கப்பூர் ரோச்சோர் ஆற்றில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு