சிங்கப்பூரில் S$700,000 மதிப்புள்ள மின் சிகரெட்டு கருவிகள் கடத்தல் – 14 ஆடவர்களுக்கு சிறை

(Photo: HSA)

சிங்கப்பூருக்குள் சுமார் S$700,000 மதிப்புள்ள மின் சிகரெட்டுகள் கருவிகள் (e-vaporisers) மற்றும் தொடர்புடைய பொருட்கள் கடத்தியதாக 14 ஆடவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆடவர்கள் அனைவரும் 22 முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்திய கட்டுமான ஊழியர்களின் வருகை குறைவு – சீனாவிலிருந்து ஊழியர்களை வரவழைக்கும் திட்டத்தில் 200 நிறுவனங்கள் விண்ணப்பம்

மொத்தம் 54,392 பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக சுகாதார அறிவியல் ஆணையம் (HSA), குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) இன்று (ஜூலை 5) கூட்டு ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளன.

கடந்த ஜூன் 7 அன்று, மலேசிய-பதிவு செய்யப்பட்ட ஏழு லாரிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த பொருட்களை ICA அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அந்த லாரிகள் சிங்கப்பூருக்குள் நேரடியாக கோழிகளைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்படுபவை.

அவர்கள் அனைவரும் மலேசியர்கள், கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் அவர்களுக்கு இரண்டு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான திறன் போட்டியில் கரகாட்டம், சமையல் என கலக்கும் இந்திய ஊழியர்கள்!