சிங்கப்பூரில் 80 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்!

(photo: mothership)

சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் வசிக்கும் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் தகுதியுடைவர்கள் இரண்டாவது கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை (Second COVID-19 Booster Dose) வரும் ஏப்ரல் 8- ஆம் தேதி முதல் தடுப்பூசி நிலையங்கள் (Vaccination Centres) மற்றும் கிளினிக்குகளுக்கு (Clinics) நேரில் சென்று போட்டுக் கொள்ளலாம். இதற்கு இணையதள முன்பதிவு தேவையில்லை.

சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான அனுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் குளறுபடி!

எனினும், இணையதளத்தில் முன்பதிவு செய்ய விரும்புவோருக்கு, அவர்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு முன்பதிவுக்கான இணைப்புடன் கூடிய குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

வாரத்தின் எந்த நாட்களிலும் இரவு 07.00 மணிக்கு முன்னதாக, அருகில் உள்ள தடுப்பூசி நிலையங்கள், கிளினிக்குகளுக்கு சென்று இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி நிலையங்கள், பாலிகிளினிக்குகள் (Polyclinics), கிளினிக்குகள் எங்கு அமைந்துள்ளது என்பது குறித்த முழுமையான விவரங்களுக்கு https://www.vaccine.gov.sg/locations என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம்.

அடேங்கப்பா! சிங்கப்பூரில் சுற்றுலாப் பயணிகளை கவரும் புதிய இடங்கள் – பார்வையாளர்களை திருப்திப்படுத்தும் சிங்கப்பூர் அரசாங்கம்

12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பிற நபர்கள், மருத்துவ ரீதியாக எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள், கடுமையாக நோய்வாய்ப்படும் ஆபத்தில் உள்ளவர்களும் மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். அதற்கான பரிந்துரைக் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.