சிங்கப்பூர் தயாரிப்பாளரின் ‘எமகாதகன்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!

சிங்கப்பூர் தயாரிப்பாளரின் 'எமகாதகன்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!

 

சிங்கப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமணி என்பவர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எமகாதகன்’. இந்த படத்தில் கதாநாயகர்களாக கார்த்திக் மற்றும் மனோஜ் நடித்துள்ளார். கதாநாயகியாக ரஷ்மிகா திவாரி நடித்துள்ளார். ‘வட்டகரா’ சதீஷ் வில்லனாக நடிக்க, அனுஷ்கா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மார்கழி மாதத்தையொட்டி, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் பூஜை நேரங்கள் அறிவிப்பு!

இப்படத்திற்கு விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபிள் நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் தயாரிப்பாளர் கே.ராஜன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் கிருஷ்ணமணி, “நான் சிங்கப்பூரில் தொழில் செய்து வருகிறேன். தஞ்சாவூரில் பிறந்த நான், சென்னையில் பணியாற்றியதால், சினிமாவில் எப்போதுமே எனக்கு ஆர்வம் அதிகம். அந்த சமயத்தில் தான் இயக்குநர் கிஷன்ராஜை சந்தித்தேன். அப்போது, இபபடத்தின் கதைக் குறித்து கூறினார். அதைத் தொடர்ந்து, படப்பிடிப்பு ஆரம்பித்தது; குறைந்த நாட்களிலேயே படத்தை முடித்துக் கொடுத்தார். இது போன்ற குறைந்த செலவிலான படங்கள் வெளிவருவதற்கு மீடியாக்கள் ஆதரவு தர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

“சிங்கப்பூரில் இருந்து கேட்விக் விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவை”- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

இதனிடையே, ‘எமகாதகன்’ படத்தின் ட்ரைலரை யூடியூப் பக்கத்தில் 54,070 பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.