“சிங்கப்பூரில் இருந்து கேட்விக் விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவை”- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

Photo: Singapore Airlines Official Facebook Page

 

சிங்கப்பூரில் இருந்து கேட்விக் விமான நிலையத்திற்கும், கேட்விக் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கும் நேரடி விமான சேவை (Non-stop Flights) வழங்கப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

அனைத்துலக வெளிநாட்டு ஊழியர்கள் தினக் கொண்டாட்டம்…..அன்பளிப்பு பைகளைப் பெற்றுக் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள்!

இது குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Singapore Airlines- ‘SIA’)வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிங்கப்பூர்- கேட்விக் விமான நிலையம் (Gatwick Airport) இடையே இருமார்க்கத்திலும் நேரடி விமான சேவை வழங்கப்படும். இந்த விமான சேவை, 2024- ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வழங்கப்படும். இந்த வழித்தடத்தில் SQ310 என்ற எண்ணில் விமானம் இயக்கப்படும்.

A350-900 ரக விமானம் இந்த வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது. இந்த விமானம் மூன்று வகையான இறக்கைகளுடன் மொத்தம் 253 இருக்கைகளைக் கொண்டுள்ளது.

வாரத்தில் திங்கள்கிழமை, வியாழன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய ஐந்து நாட்கள் இந்த வழித்தடத்தில் விமான சேவை வழங்கப்படும். இதற்கான ஒழுங்குமுறை ஒப்புதல் நிலுவையில் உள்ளது.

மார்கழி மாதத்தையொட்டி, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் பூஜை நேரங்கள் அறிவிப்பு!

2024- ஆம் ஆண்டு ஜூன் 21- ஆம் தேதி இரவு 11.55 PM மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதல் விமானம், சிங்கப்பூரில் இருந்து கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்படும். இந்த விமான சேவையுடன் சேர்த்து, சிங்கப்பூரில் இருந்து இங்கிலாந்து நாட்டிற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கும் விமான சேவைகளின் எண்ணிக்கை வாரத்திற்கு 28- லிருந்து 33 ஆக உயருகிறது.

கேட்விக் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்தின் தென் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கு எளிதாகச் செல்ல முடியும். ஏற்கனவே, இங்கிலாந்தின் ஹீத்ரோ (Heathrow) மற்றும் மென்செஸ்ட்டர் (Manchester) ஆகிய நகரங்களுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.