அனைத்துலக வெளிநாட்டு ஊழியர்கள் தினக் கொண்டாட்டம்…..அன்பளிப்பு பைகளைப் பெற்றுக் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள்!

அனைத்துலக வெளிநாட்டு ஊழியர்கள் தினக் கொண்டாட்டம்.....அன்பளிப்பு பைகளைப் பெற்றுக் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள்!
Photo: High Commission of India in Singapore

 

சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள பிர்ச் சாலையில் (Birch Road Field) அமைந்துள்ள திறந்தவெளித் திடலில் அனைத்துலக வெளிநாட்டு ஊழியர்கள் தினக் கொண்டாடட்டம் நேற்று (டிச.17) மதியம் 01.00 மணிக்கு தொடங்கி, இரவு வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தற்காப்புக்கான மூத்த துணையமைச்சரும், தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் துணை தலைமைச் செயலாளருமான ஹெங் சீ ஹாவ் கலந்து கொண்டார்.

வெளிநாட்டு ஊழியர்களின் புதிய மாதிரி விடுதி அறை.. சோதனைக்காக தங்கிய ஊழியர்கள் – அங்கிருக்கும் வேற லெவல் சிறப்புகள் என்ன?

இந்த நிகழ்ச்சியில், சிங்கப்பூரில் தங்கி பணிபுரிந்து வரும் இந்தியா, இலங்கை, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 12,000- க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர். கட்டுமான ஊழியர்கள், இல்ல பணிப்பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டது கூடுதல் சிறப்பு.

நிகழ்ச்சி நடைபெற்ற திடலில், வெளிநாட்டுத் தூதரகங்கள், உணவகங்கள், அரசுசாரா அமைப்புகள் என மொத்தம் 20 ஸ்டால்கள் அமைக்கப்பட்டன. இதில், வெளிநாட்டு ஊழியர்களுக்கு என்று உடல்நல பரிசோதனைக் கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர்களை குறிவைக்கும் கும்பல்

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவுப் பொருட்களும், 9,000- க்கும் மேற்பட்ட அன்பளிப்புப் பைகளும் வழங்கப்பட்டன. பல்வேறு இசை நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.