ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம்!

Photo: singapore airlines

 

 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) மற்றும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் (Scoot Airlines) நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகள் மற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை. இந்த புதிய நடைமுறை வரும் ஜூன் 1- ஆம் தேதி வியாழன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளை நேரில் காண விரும்புபவர்களின் கவனத்திற்கு- வெளியானது முக்கிய அறிவிப்பு!

அதன்படி, சீருடையில் இருக்கும் விமானிகள், விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் முகக்கவசம் அணியக் கூடாது. எனினும், கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது ஊழியர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் இத்தகைய அறிவிப்புக்கு பெரும்பாலான ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்தாலும், சில ஊழியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வசந்த உத்சவம்!

இதனிடையே, உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்து மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், கொரோனா அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.