பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, அபராதம்!

சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை.. சாதாரண வாக்குவாதம் மரணத்தில் முடிந்த விபரீதம்
Photo: Freepil

வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தனது நிறுவனத்தில் பணிபுரிந்த வியட்நாமிய பெண் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த பெண்ணுக்கு ஆங்கிலம் பேச தெரியவில்லை, இதனை தண்டாயுதம் எழிலன் என்ற ஊழியர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளார்.

உலகின் முதல் 50 ஸ்மார்ட் சிட்டி அரசாங்கங்களின் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடம்!

பெண் மீது தனிப்பட்ட அக்கறை செலுத்தத் தொடங்கிய அவர், பெண்ணின் லாக்கரில் உணவை விட்டுவிட்டு பின்னர் பல குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.

அதில், எழிலன் அவரை மிஸ் பண்ணுவதாகவும், பார்க்க விரும்புவதாகவும் பல குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார், இது பெரும்பாலும் ஆங்கிலத்திலிருந்து வியட்நாமிய மொழியில் கணினி மூலம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 30 அன்று, பெண்களின் கழிப்பறைக்கு வெளியே காத்திருந்த எழிலன், அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி காவல்துறையிடம் அந்த பெண் புகார் பதிவு செய்தார், அன்று மாலை எழிலன் கைது செய்யப்பட்டார். அவரது கைப்பேசியில் 50 ஆபாச படங்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 1), இந்திய நாட்டை சேர்ந்த 48 வயதான எழிலனுக்கு நான்கு வார சிறைத்தண்டனையும், அவரது இந்த செயல்களுக்காக S$8,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் பாலியல் சீண்டலுக்கும், மேலும் கைப்பேசியில் ஆபாச காணொளிகளை வைத்திருந்த குற்றச்சாட்டுக்கும் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

என்ன நடந்தது என்று வியட்நாமிய பெண் தெரிவித்ததையடுத்து அவரது எம்பிளாய்மென்ட் பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

S Pass, work permit உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை தனிமைப்படுத்தப்படும் காலத்தில் தள்ளுபடி..!