உலகின் முதல் 50 ஸ்மார்ட் சிட்டி அரசாங்கங்களின் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடம்!

National Day celebrations 2023 Singapore
(Photo: Singapore Motherhood)

உலகின் முதல் 50 ஸ்மார்ட் சிட்டி அரசாங்கங்களை உள்ளடக்கிய இரண்டாண்டு ஆய்வில் சிங்கப்பூர் லண்டனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.

தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, டிஜிட்டல் மேம்பாட்டு நடவடிக்கை மற்றும் கோவிட் -19 தொற்றுநோயை தனி சிறப்பான முறையில் கையாண்டது போன்ற சிறப்புகளால் சிங்கப்பூர் முதலிடத்தை பெற்றுள்ளது.

S Pass, work permit உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை தனிமைப்படுத்தப்படும் காலத்தில் தள்ளுபடி..!

இருப்பினும், வெளிநாட்டு ஊழியர்களிடையே கோவிட் -19 பரவுவதைத் தடுப்பது போன்ற இன்னும் செய்யவேண்டியவை உள்ளதாக ஆய்வின் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய ஸ்மார்ட் சிட்டி தரவரிசை, செய்தி கட்டுரைகள், வலைத்தளங்கள் மற்றும் பிற ஊடக ஆதாரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 235 நகரங்களின் பட்டியலிலிருந்து முதல் 50 நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

(PHOTO: Singapore Tourism Board)

பொதுவான பார்வை, தலைமை, பட்ஜெட், நிதி ஊக்கத்தொகை, ஆதரவு திட்டங்கள், திறமை தயார்நிலை, மக்கள் மையம், புதுமை சுற்றுச்சூழல் அமைப்புகள், ஸ்மார்ட் கொள்கைகள் மற்றும் தட பதிவு ஆகிய 10 காரணிகளின் அடிப்படையில் அந்த நகரங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டன.

முதல் 10 தரவரிசை நகரங்கள்:

  1. சிங்கப்பூர்
  2. சியோல், தென் கொரியா
  3. லண்டன், UK
  4. பார்சிலோனா, ஸ்பெயின்
  5. ஹெல்சின்கி, பின்லாந்து
  6. நியூயார்க் நகரம், அமெரிக்கா
  7. மாண்ட்ரீயல், கனடா
  8. ஷாங்காய், சீனா
  9. வியன்னா, ஆஸ்திரியா
  10. ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து

சாலையின் நடுவில் நிர்வாணமாக படுத்து கிடந்த ஆடவர் கைது