சாலையின் நடுவில் நிர்வாணமாக படுத்து கிடந்த ஆடவர் கைது

Zion Road naked man arrested
(Screengrab from Roads.sg/FB)

சியோன் (Zion) சாலையின் நடுவில் நிர்வாணமாக படுத்து கிடந்த 51 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மார்ச் 31ஆம் தேதி மாலை 4 மணியளவில், சியோன் சாலையில் படுத்து கிடந்த அந்த ஆடவர் தொடர்பான கேமரா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

S Pass, work permit உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை தனிமைப்படுத்தப்படும் காலத்தில் தள்ளுபடி..!

அந்த ஆடவர் படுத்திருந்த பாதையில் வாகனத்தை நிறுத்திய ஒருவர், அவரை மற்ற வாகனங்கள் தாக்கி விடாமல் இருக்க தடுப்பு பாதுகாப்பு வழங்கியுள்ளார்.

நேற்று (மார்ச் 31) பிற்பகல் 3:50 மணியளவில், தியோங் பஹ்ரு சாலை மற்றும் சியோன் சாலை சந்திப்பில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த ஆடவர் பொது இடத்தில் நிர்வாணமாக இருந்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டார், மேலும் போதைப்பொருள் தொடர்பான சந்தேகமும் அவர் மீது உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

பாண்டான் நீர்த்தேக்கம் அருகே ஏற்பட்ட விபத்தில் பாதசாரி மரணம்..!