Employment Pass அனுமதி புள்ளி முறையில் ஏதேனும் தந்திரம் செய்ய முயற்சித்தால் அதிக கடும் நடவடிக்கை…!

ஊழியர்களின் சம்பளத்தை
MOM

சிங்கப்பூரில் Employment Pass அனுமதிகளுக்கான புள்ளி முறை என்னும் Points system அடுத்த 2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது நாம் அறிந்தது தான்.

இதில் ஏதேனும் தந்திரங்கள் செய்ய முயற்சித்தால் அவர்களுக்கு எதிராக மனிதவள அமைச்சகம் (MOM) வலுவான கடும் நடவடிக்கைகளை எடுக்கும் என்று நாடாளுமன்றத்தில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் திங்கள்கிழமை (மார்ச் 7) தெரிவித்தார்.

சிங்கப்பூரில் அனைத்து பொது இடங்களிலும் புகைப்பிடிக்க தடை – மீறினால் கடும் அபராதம்!

Employment Pass விண்ணப்பத்திற்கு அனுமதி பெறுவதற்கு நிறுவனங்கள் தவறான தகவலை அறிவித்தது கண்டறியப்பட்டால், முதலாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்று டாக்டர் டான் கூறினார்.

புதிய EP விண்ணப்பதாரர்களுக்கு 2023ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் COMPASS குறித்து அவர் நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.

புதிய COMPASS கட்டமைப்பின்படி, Employment Pass அனுமதிகளில் வெளிநாட்டினரை பணியமர்த்தும் நிறுவனங்கள், ஊழியரின் சம்பளம், தகுதிகள், ஊழியர்களுடைய தேசிய வகை மற்றும் உள்ளூர் வேலைக்கான ஆதரவு உட்பட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் குறைந்தபட்சம் 40 புள்ளிகளை பெற வேண்டும்.

புள்ளி முறை பற்றிய முழு விவரம்:

சிங்கப்பூரில் Employment Pass அனுமதிக்கு புதிய புள்ளிகள் முறை – வாங்க அதுபற்றி பார்ப்போம்.

ஊழியர் பற்றாக்குறை… கட்டுமான, கடல் துறை Work permit ஊழியர்களின் நுழைவு நடைமுறை எளிமை! – செய்ய வேண்டியது என்ன?