துவாஸில் உள்ள ஆலையில் வெடிப்பு: ஒருவர் மரணம் – இருவருக்கு பலத்த காயம்

Explosion rocks Tuas incineration plant death
Towards Zero Waste website

துவாஸில் உள்ள கழிவு எரியூட்டும் ஆலையில் இன்று செப். 23 பிற்பகல் வெடிப்பு ஏற்பட்டது, இதன் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தில் இருவர் பலத்த காயமடைந்ததாகவும் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

கிருமி பரவல் குழுமத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி

துவாஸ் அவென்யூ 20ல் மாலை 4.30 மணியளவில், காவல்துறை கார்கள் மற்றும் குறைந்தது ஆறு சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) வாகனங்கள் அந்த வளாகத்தில் காணப்பட்டன என்றும் ST கூறியுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் இறந்ததாக அங்குள்ள ஊழியர் ஒருவர் அந்த ஊடகத்திடம் தெரிவித்தார்.

மேலும் மற்ற இருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் என்றும் கூறியுள்ளது.

இந்த துவாஸ் ஆலை சிங்கப்பூரில் கட்டப்படும் இரண்டாவது குப்பை எரியூட்டும் ஆலை ஆகும். இது தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) மூலம் நடத்தப்படுகிறது.

மேலும் விவரங்கள் அறிய எங்களுடன் இணைப்பில் இருங்கள்.

கட்டுமானப் பகுதியில் லாரி மோதிய விபத்தில் இந்திய ஊழியர் மரணம்