இணைய ஊடுருவல்: கிளினிக்கில் 73,000- க்கும் மேற்பட்ட நோயாளிகளின் தகவல் பாதிப்பு!

PHOTO: EYE & RETINA SURGEONS

 

 

உலகில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி நொடிக்கு நொடி வளர்ந்து வருகிறது. இது ஒருபுறம் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாகவும், வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. மற்றொருபுறம் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியால் ஆபத்தும் ஏற்படுகிறது. உதாரணமாக, உலகில் எண்ணற்ற வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளில் கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை ஹேக்கர்கள் திருடி செல்கின்றனர். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்வது சமீபத்திய காலக் கட்டத்தில் அதிகரித்து வருகிறது. மேலும், வங்கியில் இருந்து அழைப்பதாகக் கூறி வாடிக்கையாளர்களிடம் அவர்களின் ரகசிய குறியீடு பெற்று பண மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, சிங்கப்பூரில் பண மோசடி அதிகளவில் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் சிங்கப்பூரில் உள்ள ‘ஐ அண்ட் ரெட்டினா சர்ஜன்ஸ்’ (Eye & Retina Surgeons- ‘ERS’) எனும் கிளினிக்கில் சிகிச்சைப் பெறும் சுமார் 73,500 நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்களும், அவர்களின் மருத்துவத் தகவல்களும் கணினி கட்டமைப்பைப் பாழ்படுத்தும் இணைய ஊடுருவில் பாதிக்கப்பட்டுள்ளன. நோயாளிகளின் பெயர்கள், முகவரிகள் அடையாள அட்டை எண்கள், தொடர்பு எண்கள், மருத்துவத் தகவல்கள் உள்ளிட்டவை ஊடுருவப்பட்டன. எனினும் வங்கிக் கணக்கு தகவல்கள் எவையும் ஊடுருவப்படவில்லை என கிளினிக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் மீட்பு பணி: களமிறங்கிய சிங்கப்பூர் விமானப் படை விமானம்!

அதேபோல், கணினி கட்டமைப்பை முழுவதுமாகச் சோதிக்கப்பட்டு, பாதுகாப்பான் முறையில் தகவல் மீட்கப்பட்டது; இணைய ஊடுருவல் மீண்டும் நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் ஈஆர்எஸ் கிளினிக் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகையில், “கிளினிக்கின் சமரசம் செய்யப்பட்ட ஐடி அமைப்புகள் அமைச்சகத்தின் ஐடி அமைப்புகளான தேசிய மின்னணு சுகாதார பதிவு போன்றவற்றுடன் இணைக்கப்படவில்லை என்றும், சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஐடி அமைப்புகள் மீது இதே போன்ற சைபர் தாக்குதல்கள் எதுவும் இல்லை” என்றும் கூறியுள்ளது.

எதிர்பாராத விதமாக தொழிற்துறை இயந்திரத்தில் சிக்கிய ஊழியரின் கை – போராடி மீட்ட SCDF

இந்த சம்பவத்தை விசாரிக்கவும், அதன் அமைப்புகளை முழுமையாக ஆய்வு செய்யவும் மற்றும் சைபர் பாதுகாப்பு நிறுவனத்துடன் (Cyber Security Agency- ‘CSA’) இணைந்து அதன் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த உடனடி தணிப்பு நடவடிக்கைகளை எடுக்க ஈஆர்எஸ் கிளினிக்கைக் கேட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசித்தது என்பது குறிப்பிடத்தக்கது.