சிங்கப்பூரில் ஒரு வாட்டர் கூலரில் வீசப்பட்ட முக கவசம்; சமூக பொறுப்புடன் நடக்க வலியுறுத்தல்..!

Face mask thrown in water cooler at Yishun courtyard
Face mask thrown in water cooler at Yishun courtyard (Photo: Stomp)

நியூ சீன் ஈஸ்ட் கோர்ட்டில் உள்ள ஒரு வாட்டர் கூலரில் முக கவசம் ஒன்று வீசப்பட்டிருந்ததன் தொடர்பான கருத்துக்கு நகர மன்றம் பதிலளித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 2) இரவு 8 மணியளவில் வாட்டர் கூலரில் முக கவசத்தை பார்த்த ஸ்டோம்பர் வாசகர் பிரான்செஸ்கோ கவலை தெரிவித்தார்.

இதையும் படிங்க : இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்புவோர் 14 நாள் ஹோட்டலில் தனிமை..!

மேலும், குடியிருப்பாளர்களுக்கு ஒரு அற்புதமான முற்றத்தை கட்டி, அதன் மேல் வாட்டர் கூலரையும் அரசாங்கம் நிறுவியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“COVID-19 பரவல் காரணமாக, வாட்டர் கூலர்கள் மூடப்பட்டுள்ளன என்பதை நான் புரிந்துகொள்கிறேன். “இருப்பினும், இந்த முக கவசத்தை வாட்டர் கூலரில் வீசியதை மன்னிக்க முடியாதது ” என்றார்.

அதன் தொடர்பில் நகர மன்றத்திடம் ஸ்டோம்ப் எழுப்பிய கேள்விக்கு, வழக்கமான துப்புரவு பணிகளின்போது எங்களது துப்புரவு ஊழியர்கள் அந்த முக கவசத்தை அப்புறப்படுத்திவிட்டனர் என்று குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய சம்பவத்தை நகர மன்றம் முதல் முறையாக எதிர்கொள்கிறது. இது மீண்டும் நிகழாது என நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும்,”எங்களது துப்புரவு ஊழியர்கள் இந்த இடத்தில் கூடுதல் கவனம் செல்த்துவர். இந்த சூழலை தொடர்ந்து கண்காணிக்கும்” என்றும் நகர மன்றம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 சூழலைக் கருத்தில்கொண்டு பொதுமக்கள் சமூகப் பொறுப்புணர்வுடன், எல்லா நேரங்களிலும் நடந்துகொள்ளும்படி ஊக்குவிப்பதாகவும் நகர மன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பள்ளிகள், வேலையிடங்கள் மூடல் எதிரொலி; மால்களில் நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil