சிங்கப்பூரில் பள்ளிகள், வேலையிடங்கள் மூடல் எதிரொலி; மால்களில் நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்..!

Long queues at some malls as shoppers rush to prepare for closure of schools and most workplaces
Long queues at some malls as shoppers rush to prepare for closure of schools and most workplaces

COVID-19 பரவுவதைத் தடுக்க மக்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசாங்கம் அழைப்பு விடுத்த போதிலும், சனிக்கிழமை (ஏப்ரல் 4) சில மால்களில் வாடிக்கையாளர்கள் வரிசையாக காணப்பட்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அடுத்த வாரம் முதல் பள்ளிகள் மற்றும் பெரும்பாலான வேலையிடங்கள் மூடப்படும் என்று அரசாங்கம் அறிவிப்பு செய்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் COVID-19: குறைந்தது இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் முஸ்தபா சென்டர்..!

அத்தியாவசிய பொருட்கள், பொம்மைகள், புத்தகங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் போன்ற பொருட்களை வாங்க வெளியே வருவதாக சி.என்.ஏ உடன் பேசிய வாடிக்கையாளர்கள் கூறினர்.

இது குறித்து வாடிக்கையாளர்களில் ஒருவர் கூறுகையில், தனது 10 வயது மகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட பொம்மைகளை வாங்க வந்ததாக குறிப்பிட்டார். இல்லையென்றால், வீடு தலைகீழாக மாறிவிடும் என்றும் அவர் கூறினார்.

COVID-19 தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான நாட்டின் கடுமையான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் ஏப்ரல் 8 முதல் மே 4 வரை முழு வீட்டு அடிப்படையிலான கற்றலை செயல்படுத்தும் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 75 பேர் COVID-19 கிருமித்தொற்றால் பாதிப்பு..!

அதே போல், ஏப்ரல் 7 முதல், அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதாரத் துறைகளைத் தவிர்த்து, பெரும்பாலான வேலையிடங்கள் மூடப்படும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து பல்பொருள் அங்காடிகள், ஈரச் சந்தைகள், ஹாக்கர் மையங்கள் மற்றும் உணவகங்கள் திறந்த நிலையில் இருக்கும்.

ஆனால் அங்கே சாப்பிடுவது இனி அனுமதிக்கப்படாது. அங்கிருந்து வாங்கி செல்லுதல் மற்றும் வரவழைத்து சாப்பிடலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 அறிகுறி சுய பரிசோதனை இணையத் தளம் அறிமுகம்..!