சிங்கப்பூரில் COVID-19 அறிகுறி சுய பரிசோதனை இணையத் தளம் அறிமுகம்..!

Singapore launches COVID-19 online symptom checker
Singapore launches COVID-19 online symptom checker

COVID-19 இருக்குமோ என்று கவலைப்படும் பொதுமக்கள், தற்போது ஆன்லைன் மூலம் விரைவான சுய பரிசோதனையை செய்து பார்க்கலாம், மேலும் தேவையான அடிப்படை ஆலோசனைகளையும் பெறலாம்.

அதற்காக ஒரு இணைய பக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மருத்துவரைச் சென்று பார்க்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க உதவியாக இருக்கும்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் அனைத்து நுழைவுகளிலும் ERP கட்டணங்கள் நிறுத்தம்..!

தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பு (NUHS), தொற்று நோய்க்கான தேசிய மையம் (NCID) மற்றும் MOHT ஆகியவற்றால் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) இந்த தளம் தொடங்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் என்ன செய்வது என்பது பற்றிய தெளிவை இதன் மூலம் பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இணையப் பக்கத்துக்குச் செல்லும்போது சில கேள்விகள் கேட்கப்படும், அதற்கு நாம் சரியான பதிலை அளிக்கவேண்டும்.

கேட்கப்படும் கேள்விகள்:

  • வயது
  • நாள்பட்ட நோய் ஏதும் இருக்கிறதா ?
  • கடந்த 14 நாள்களில் சிங்கப்பூலிருந்து வெளியே சென்று வந்தவரா ?
  • சந்தேகத்துக்குரிய COVID-19 தொற்று நோயாளியோடு தொடர்பில் இருந்தாரா ?
  • இருமல், மூச்சு விடுவதில் சிரமம், சுவையும் வாசமும் உணரும் சக்தியை இழத்தல் போன்ற முக்கிய அறிகுறிகள் உள்ளனவா என்பதையும் அதில் தெரிவிக்கவேண்டும்.

உள்ளிட்ட தகவல்களின் அடிப்படியில், மருத்துவரைக் காணச் செல்ல வேண்டுமா அல்லது தொடர்ந்து அறிகுறிகளை அணுக்கமாய் கவனித்துவர வேண்டுமா என்பது பற்றி முடிவெடுக்க இந்த இணையப் பக்கம் பரிந்துரைக்கும்.

இணைய பக்கத்தின் முகவரி : SGcovidcheck