சிங்கப்பூர் COVID-19: குறைந்தது இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் முஸ்தபா சென்டர்..!

Mustafa Centre to close for at least two weeks; will undergo disinfection
Mustafa Centre to close for at least two weeks; will undergo disinfection

சிங்கப்பூரில் COVID-19 வைரஸ் பரவும் புதிய குழுவாக கண்டறியப்பட்டுள்ள மெகமால் முஸ்தபா சென்டர் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று அதன் நிர்வாகம் (ஏப்ரல் 4) தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சையத் அல்வி சாலையில் உள்ள முஸ்தபா சென்டரில் நிபுணத்துவ உதவியுடன் கிருமிநீக்க பணிகள் செய்யப்படும் என்றும் அதன் நிர்வாக இயக்குனர் முஸ்தாக் அகமது CNAவிடம் தெரிவித்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 75 பேர் COVID-19 கிருமித்தொற்றால் பாதிப்பு..!

முஸ்தபா சென்டரில் கடந்த வியாழக்கிழமை, நோய் பரவும் புதிய குழுவை சுகாதார அமைச்சகம் (MOH) அடையாளம் கண்டது.

பாதிக்கப்பட்ட பெரும்பாலான நபர்கள் ஊழியர்கள் என்றும், அவர்கள் ஒரே துறையில் வேலை செய்யவில்லை என்றும் திரு முஸ்தாக் கூறியுள்ளார்.

இந்த மாலில் சுமார் 1,400 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திரு முஸ்தாக் மேலும் கூறுகையில், பிப்ரவரி மாதம் முதல் மால் வளாகத்திற்குள் நுழையும் அனைத்து ஊழியர்களுக்கும், ஒவ்வொரு முறையும் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் வரும் 7ஆம் தேதியிலிருந்து அத்தியாவசியச் சேவைகள் மட்டுமே இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 அறிகுறி சுய பரிசோதனை இணையத் தளம் அறிமுகம்..!