முகநூல் நிறுவனத்திடம் 1,260 கோரிக்கை மனுக்கள் அனுப்பிய சிங்கப்பூர் – இணைய குற்றங்களை விசாரிக்க நடவடிக்கை

(photo: Facebook)

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில், 1,630 முகநூல் கணக்குகள் குறித்து சில தகவல்கள் வழங்கும்படி சிங்கப்பூர் அரசாங்கம் முகநூல் நிறுவனத்திற்கு இதுவரை 1,260 கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளது.

அதற்கு முந்தய ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டு மூன்று மடங்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டதாக தெரிகிறது.

MRT ரயிலில் பயணியை தாக்கிய சந்தேகத்தின்பேரில் ஆடவர் ஒருவர் கைது

மேலும், மற்ற ஆசிய நாடுகளை காட்டிலும் சிங்கப்பூரே சென்ற ஆண்டு அதிகமான கோரிக்கைகளை முகநூல் நிறுவனத்திற்கு சமர்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முகநூல் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட கோரிக்கைகளில் 83% பதில்கள் மூலம் பூர்த்தி செய்துவிட்டதாக அந்த நிறுவனமே கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.

இணைய குற்றங்கள், மோசடிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கோரிக்கைகலே அதிகம் என தெரியவருகிறது.

உலகளவில் 191,013 கோரிக்கைகள் முகநூல் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் 11 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த மனிதவள அமைச்சகம்