MRT ரயிலில் பயணியை தாக்கிய சந்தேகத்தின்பேரில் ஆடவர் ஒருவர் கைது

(Photo: CNA)

MRT ரயிலில், மற்றொரு பயணியை தாக்கியதாக சந்தேகத்தின்பேரில் 40 வயதான ஆடவர் ஒருவர் பொது இடத்தில் தொல்லை ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நேற்று (மே 23) காலை 10.13 மணியளவில் டௌன்டவுன் பாதை வழியாக நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல் படை (SPF) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் 11 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த மனிதவள அமைச்சகம்

ரயிலில் இருந்தபோது, 40 வயது ஆடவர் மற்றும் 24 வயது இளைஞருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது SPF தெரிவித்துள்ளது.

இருவருக்கும் இடையில் தகராறு அதிகரித்ததால், 40 வயது ஆடவர் அந்த இளைஞனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலின் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

40 வயது ஆடவர், வேண்டுமென்றே தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்தியதற்காக விசாரிக்கப்படுவார் என்றும் அது கூறியுள்ளது.

மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.

முறையான அனுமதி இல்லாமல் காரை தடுப்பு வேலியில் மோதிய ஓட்டுநர் கைது