முறையான அனுமதி இல்லாமல் காரை தடுப்பு வேலியில் மோதிய ஓட்டுநர் கைது

Punggol Way divider accident
(Photo: Ah Siong's Facebook)

பொங்க்கோலில், 18 வயதான ஆடவர் ஒருவர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி, போக்குவரத்து காவலரிடம் இருந்து தப்பி சென்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

தெம்பனீஸ் அதிவேக நெடுஞ்சாலை நோக்கி செல்லும், சிலேத்தர் அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த மே 22 அன்று நள்ளிரவு 12 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் 11 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த மனிதவள அமைச்சகம்

காரை சாலையோரம் நிறுத்துமாறு காவலர்கள் ஓட்டுனரிடம் சமிக்ஞை செய்தனர், ஆனால் வாகனத்தை நிறுத்தாமல் அதற்கு பதிலாக, ஓட்டுநர் வேகமாக சென்றுள்ளார்.

பின்னர், அதிகாரிகள் காரைத் துரத்தினர், வேகமாக சென்ற கார், பொங்க்கோல் வே வழியாக மத்திய டிவைடர் தடுப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தை தொடர்ந்து, 21 வயது ஆண் பயணி ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், காப்பீடு இல்லாமல் மோட்டார் வாகனத்தைப் பயன்படுத்துதல், உரிமையாளரின் அனுமதியின்றி வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து தொடர்பான பிற குற்றங்களுக்காகவும் ஓட்டுநர் மீது விசாரணை நடத்தப்படுகிறது.

மேலதிக விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிதாக ஊழியர் ஒருவருக்கு தொற்று – விவரம்