தயாரிப்புகளில் தவறான விலை லேபில் இருந்தால், “நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்” – FairPrice

Nina Monzolevska/TikTok

தயாரிப்புகளில் தவறான விலை விவரம் இருந்தால், அது குறித்து நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு FairPrice வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இதனால் தேவையற்ற தவறான புரிதல் மற்றும் தேவையற்ற பொது இடையூறுகளை தவிர்க்கலாம் எனவும் அது நேற்றைய பிப்ரவரி 7, 2022 அறிக்கையில் கூறியுள்ளது.

“ஊழியர்கள் நேசிக்கப்பட வேண்டியவர்கள்” – சாதாரண குடும்பத்தை சேர்ந்த வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதலாளி

சமீபத்தில் தவறாக எடை குறிப்பிடப்பட்ட கோழி கறி தயாரிப்பு பற்றி சூப்பர் மார்க்கெட் வெளியிட்ட இரண்டாவது அறிக்கை இதுவாகும்.

சிங்கப்பூரில் உள்ள டிக்டாக் பயனர் ஒருவர் அந்த எடை குறைபாடு குறித்து டிக்டாக்கில் பதிவிட்டார் என்பது பற்றி நாம் முன்னர் பதிவிட்டு இருந்தோம்.

அட்டையில் ஒரு எடை, உண்மையில் வேறு எடை… NTUC FairPrice பொருளின் அதிக விலையை தோலுரித்து காட்டிய பெண்!

அந்த வாடிக்கையாளரின் கவலையை தீர்க்கவும், தவறாக எடை குறித்து விசாரிக்கவும் அவர்கள் வாடிக்கையாளரைத் தொடர்பு கொண்டதாக அது தெரிவித்துள்ளது.

இது போன்ற கருத்துக்கள் தங்களின் மேம்பாட்டிற்கு உதவும் என்றும் அது கூறியுள்ளது.

சிங்கப்பூரில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர், குழந்தைகள் 9 பேர் மருத்துவமனையில் அனுமதி