சீனப் புத்தாண்டின் முதல் நாள் பிப்ரவரி 1 அன்று 133 FairPrice கடைகள் தொடர்ந்து செயல்படும்

சிங்கப்பூர் முழுவதும் உள்ள மொத்தம் 133 FairPrice கடைகள் சீனப் புத்தாண்டின் முதல் நாளான பிப்ரவரி 1 அன்று தொடர்ந்து செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் திறந்திருக்கும் FairPrice கடைகளின் எண்ணிக்கை ஆண்டு ஆண்டுகளாக படிப்படியாக அதிகரித்து வருகிறது.

சிங்கப்பூரை விட்டு வெளியேறிய வெளிநாட்டினரின் விவரங்களைப் பயன்படுத்தி ப்ரீபெய்டு சிம் கார்டு பதிவு… 10 பேர் கைது!

கடந்த ஆண்டு 129 கடைகள் திறக்கப்பட்டது, இந்த ஆண்டு கூடுதலாக நான்கு கடைகள் திறக்கப்படவுள்ளன.

சீனப் புத்தாண்டில் 40 கடைகள் 24 மணிநேரமும் திறக்கப்படும் என்றும், 91 கடைகள் மாலை 5 மணிக்கு மூடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜூவல் மற்றும் பால்மோரல் பிளாசாவில் உள்ள கடைகள் வழக்கம் போல் செயல்படும், அவைகள் முறையே இரவு 11 மற்றும் இரவு 10 மணிக்கு மூடப்படும்.

FairPrice ஆன்லைனில், ஜன. 31 முதல் பிப்ரவரி 2 வரையிலான பண்டிகைக் காலத்தில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை டெலிவரிகள் தொடரும்.

இந்தியாவின் ஆறு முக்கிய விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு PCR சோதனைக்கான முன்பதிவு அவசியம்