சாதனைகள், சோதனைகள் பல நிகழ்ந்த ‘2023’ இன்றுடன் விடைபெறுகிறது!

சாதனைகள், சோதனைகள் பல நிகழ்ந்த '2023' இன்றுடன் விடைபெறுகிறது!

 

சாதனைகள், சோதனைகள் பல நிகழ்ந்த 2023- ஆம் ஆண்டு இன்றுடன் விடைபெறுகிறது.

எக்ஸ்போசாட் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது PSLV C58 ராக்கெட்!

2023- ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று (டிச.31) நம்பிக்கையோடு 2024 புத்தாண்டை வரவேற்க மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உட்பட உலகமெங்கும் 2024 புத்தாண்டை வரவேற்க பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டுக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், சிங்கப்பூரில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளிட்டோர் புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். அதேபோல், பேக்கரிகளில் வித விதமான கேக்குகளை வாங்க கூட்டம் அலைமோதுகிறது.

‘புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள்- 2024’: திருச்சி- சிங்கப்பூர் இடையேயான ‘ஸ்கூட்’ விமான சேவை- விறுவிறுப்படைந்த டிக்கெட் முன்பதிவு!

மெரினா பே, ஹார்ட்லேண்ட் உள்ளிட்ட சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் கண்கவர் வாணவேடிக்கைகள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. வாணவேடிக்கைகளைக் காண வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை காவல்துறை செய்துள்ளது. அத்துடன், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் பொது இடங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

விடுமுறை தினம் என்பதால், சிங்கப்பூருக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளும் புத்தாண்டைக் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனால் சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது என்றே கூறலாம்.