சிங்கப்பூரில் மேலும் ஒரு கொடூர வேலையிட விபத்து.. இந்திய ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு

சிங்கப்பூரில் மேலும் ஒரு கொடூர வேலையிட விபத்தில் இந்திய ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த ஏப்ரல் 22 அன்று காலை 10 மணியளவில் தானா மேரா ஸ்டேஜிங் மைதானத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.

தமிழ்நாட்டில் தன் சொந்த ஊருக்கு வருகை தந்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சர்.. எதற்காக தெரியுமா?

விபத்து நடந்த இடம் ஹவுசிங் போர்டு தளம் ஆகும், அங்கு தோண்டி எடுக்கப்படும் பழைய பொருட்களை கட்டுமான நிறுவனங்கள் அப்புறப்படுத்தும் பணி நடந்து வந்துள்ளது.

அப்போது, 32 வயதான இந்திய ஊழியர், தளத்தில் உள்ள ஓய்வு இடத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது, Wheel loader வாகனம் அவர் மீது மோதியதாக மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

அது ஹூண்டாய் இன்ஜினியரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷனால் இயக்கப்படும் தளம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர், அவர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், எந்த சிகிச்சையும் பயனளிக்காமல் கடந்த வியாழன் (மே 5) அன்று அவர் உயிரிழந்தார்.

அவர், ஸ்விஃப்ட் டீம் இன்ஜினியரிங் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இறப்பு குறித்த புதிய விவரங்கள் நேற்று செவ்வாயன்று மனிதவள அமைச்சகத்தால் (MOM) பகிர்ந்து கொள்ளப்பட்டன.

ஆலையில் தீ: பெரிய இயந்திரத்தை ஊழியர்கள் பயன்படுத்தியபோது தீ பற்றி விபத்து

தான் ஓட்டிய கனரக வாகனம் தனக்கே எமனாய் வந்த சோகம் – தமிழக ஊழியர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்