பிப்.16- ல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங்!

Photo: Singapore Finance Minster Lawrence Wong Official Facebook Page

 

வரும் பிப்ரவரி 16- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 03.30 மணிக்கு சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் 2024- ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை சிங்கப்பூரின் துணை பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் தாக்கல் செய்யவுள்ளார்.

சிங்கப்பூருக்கு வருகை தந்த 1.1 மில்லியன் இந்திய சுற்றுலா பயணிகள்

பட்ஜெட் தாக்கல் நிகழ்வுகள் சிங்கப்பூரின் உள்ளூர் இலவச தொலைக்காட்சிகளிலும், வானொலியிலும் நேரலை செய்யப்படும். அதேபோல், பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் சிங்கப்பூர் நிதியமைச்சகத்தின் எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் நேரலை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18வது மாடியில் இருந்து கீழே விழுந்த வெளிநாட்டவர்.. மரத்தில் விழுந்து பரிதாப மரணம்

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன் அதன் முழு அறிக்கையும் www.singaporebudget.gov.sg என்ற இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பட்ஜெட் முழு அறிக்கையும் பெற விரும்புவோர் www.mof.gov.sg/email-subscription என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிட்டு பதிவுச் செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.