“பிப்.17- ஆம் தேதி GSLV-F14 ராக்கெட் விண்ணில் பாய்கிறது”- இஸ்ரோ அறிவிப்பு! 

"பிப்.17- ஆம் தேதி GSLV-F14 ராக்கெட் விண்ணில் பாய்கிறது"- இஸ்ரோ அறிவிப்பு!
Photo: ISRO
வரும் பிப்ரவரி 17- ஆம் தேதி GSLV-F14 ராக்கெட் விண்ணில் பாயவுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organisation- ‘ISRO’) என்றழைக்கப்படும் இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வரும் பிப்ரவரி 17- ஆம் தேதி அன்று மாலை 05.30 மணிக்கு INSAT-3DS என்ற செயற்கைக்கோளுடன் GSLV-F14 விண்ணில் பாயவுள்ளது.
இந்த ‘INSAT-3DS’ செயற்கைக்கொள் புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வானிலை தொடர்பான தகவல்களைத் துல்லியமாக நிகழ் நேரத்தில் வழங்கும். அதேபோல், புயல், கனமழை போன்ற இயற்கை பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே தகவல் கொடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.