திருச்சி, சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக்கான பயண கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

Photo: IndiGO Official Twitter Page

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்டப் பண்டிகைகள் நெருங்கி வருவதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும், விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை வழங்கி வரும் விமான நிறுவனங்கள் விமான பயண கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியுள்ளன. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜன.21- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் தை அமாவாசை வழிபாடு!

குறிப்பாக, திருச்சி, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்கூட், இண்டிகோ ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனங்கள் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், தற்போது பண்டிகைகள் காலம் என்பதால் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, திருச்சி, சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக்கான பயண கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியுள்ளனர் விமான நிறுவனங்கள். இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

 

Photo: Air India Express Website

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு அதிகபட்ச கட்டணமாக ரூபாய் 40,461.46 ஆகவும், குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 33,504.16 ஆகவும், சிங்கப்பூரில் இருந்து திருச்சி செல்வதற்கு 20,929.10 ஆகவும், குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 12,165.89 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Photo: Flyscoot Official Website

அதேபோல், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஸ்கூட் விமான நிறுவனம் (Flyscoot), “திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு விமான பயணக் கட்டணமாக ரூபாய் 38,325.76 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமான கட்டணம் உயர்வாக உள்ள போதிலும், அடுத்த வாரத்தில் பெரும்பாலான நாட்களுக்கான விமான பயண டிக்கெட்டுகள் முற்றிலும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

ட்விட்டரில் புதிய அம்சம் அறிமுகம்!

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு செல்வதற்கான அதிகபட்ச விமான பயண கட்டணம் ரூபாய் 23,408 ஆகவும், குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 10,708 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Photo: Indigo Airlines Official Website

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் (Indigo Airlines), திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான சேவைக்கு அதிகபட்சமாக ரூபாய் 50,132 கட்டணமாக நிர்ணயித்துள்ளது.

“14 வயது சிறுமி, 84 வயது முதியவர் ஆகியோரை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

விமான நிறுவனங்கள் கட்டணங்களைத் திடீரென உயர்த்தியதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன், அவர்கள் தங்களது வெளிநாட்டு பயணங்களையும் ஒத்திவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.