ஜன.21- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் தை அமாவாசை வழிபாடு!

Photo: Sri Sivan Temple

சிங்கப்பூரில் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). இந்த கோயில் 24 கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ- ல் (24 Geylang East Ave 2) அமைந்துள்ளது. விஷேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன. நாள்தோறும், 100- க்கும் மேற்பட்டோர் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

“14 வயது சிறுமி, 84 வயது முதியவர் ஆகியோரை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

அந்த வகையில், அடுத்தாண்டு வரும் ஜனவரி 21- ஆம் தேதி தை அமாவாசையையொட்டி (Thai Amavasai), ஸ்ரீ சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது. இந்நாளில் தர்ப்பணம் கொடுக்க விரும்பும் பக்தர்கள் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் முன்பதிவு செய்வது அவசியமாகும்.

அதன்படி, https://registration.heb.org.sg/ இணையதளப் பக்கத்திற்கு சென்று பிறந்த தேதி, பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டும். தர்ப்பணம் (அல்லது) பிரசாதத்துடன் தர்ப்பணம், தரிசனம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர், அதற்கான கட்டணத்தை கிரெடிட் கார்டு ஆகியவை மூலம் மேற்கொள்ள வேண்டும். கட்டணம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்ற தகவல் குறுஞ்செய்தி வழியாகவும், மின்னஞ்சல் வழியாகவும் அனுப்பப்படும். டிசம்பர் 21- ஆம் தேதி புதன்கிழமை அன்று முதல் கோயில் இணையப் பக்கத்தில் முன்பதிவு தொடங்கியுள்ளது.

சிங்கப்பூரில் களைக்கட்டியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழிபாட்டு நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் கோயிலுக்கு வந்துவிட வேண்டும். கோயிலில் பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதை வழியே நிற்காமல் தொடர்ந்து நடந்தவாறு வழிபாடு முடிந்ததும், கோயில் வளாகத்திலிருந்து புறப்படும்படி பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கோயில் பிரசாதத்தை கோயில் வளாகத்தில் உண்ண வேண்டாம்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 67434566 என்ற கோயில் நிர்வாகத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் (அல்லது) இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ https://heb.org.sg/?lang=ta என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) குறிப்பிட்டுள்ளது.