ஆபத்தான ஆயுதங்களுடன் சண்டை – கடுமையான காயம் ஏற்படுத்தியதாக 5 பேர் கைது

சிங்கப்பூரில், 17 முதல் 22 வயதுக்குட்பட்ட மூன்று ஆடவர்கள் மற்றும் இரண்டு பெண்கள் ஆபத்தான ஆயுதம் கொண்டு கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (செப். 22) காவல்துறை செய்தி வெளியீட்டின் படி, கடந்த செப். 20 மதியம் 1:30 மணியளவில் பிளாக் 19 ஜலான் சுல்தானில் ஏற்படாத சண்டை குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சிங்கப்பூரில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட மூதாட்டி உட்பட மூன்று பேர் மரணம்!

காவல்துறை அங்கு வந்தபோது, 19 வயது இளையர் ஒருவரின் தலை, மேல் உடல் மற்றும் கையில் வெட்டுக்காயங்களுடன் காணப்பட்டார் என்றும், மேலும் அங்கு ஒரு கத்தி கைப்பற்றப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, காயமடைந்த ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காவல்துறை வருவதற்கு முன்பே தப்பியோடிய அந்த தாக்குதல் நடத்தியவர்களை, காவல்துறை மற்றும் சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் மற்றும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.

அதன் பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் கடந்த செப். 20 முதல் செப். 22 வரை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் 19 வயது இளையர் மீது இன்று (செப்.23) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணை நடந்து வருகிறது.

சிங்கப்பூரை சேர்ந்த மல்யுத்த வீரர் WWE அறிமுக போட்டியில் அபார வெற்றி!