மலிவு விலை உணவுக் கடைகளைக் கண்டறிய பிரத்யேக இணையதளம் அறிமுகம்!

மலிவு விலை உணவுக் கடைகளைக் கண்டறிய பிரத்யேக இணையதளம் அறிமுகம்!
Photo: BudgetMealGoWhere & Google Maps

 

சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திற்கு (Housing and Development Board- ‘HDB’) சொந்தமான கட்டிடங்கள், தொழிலாளர்கள் மற்றும் சிங்கப்பூரர்களுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. அதிகப்படியானோர் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் வசித்து வருகின்றனர்.

கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் அதிபர் ஹலிமா யாக்கோப்!

அதுமட்டுமின்றி, உணவுக் கடைகள், காப்பிக் கடைகள் நடத்துவதற்கும், அத்தகைய கட்டிடங்கள் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வெளிநாட்டு ஊழியர்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரர்களும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால் பலரும் மலிவு விலை உணவுக் கடைகளைத் தேடி, அங்கு உணவருந்தி வருகின்றனர். இந்த நிலையில், மலிவு விலை உணவுக் கடைகளை எளிதில் கண்டறியும் வகையில், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ‘BudgetMealGoWhere’ என்ற புதிய இணையதளத்தை அரசாங்கத்தின் தொழில்நுட்ப உதவியுடன் தொடங்கியுள்ளது.

முதற்கட்ட மலிவு விலையில் உணவுகளை வழங்கும் 40 காப்பிக் கடைகளின் முகவரி மற்றும் உணவின் விலை உள்ளிட்டவை இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வடிகாலில் பாய்ந்த கார் – மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய சந்தேகத்தில் பெண் கைது

https://www.gowhere.gov.sg/budgetmeal/ என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று அஞ்சல் குறியீடு (அல்லது) சாலையின் பெயரை குறிப்பிட வேண்டும். பின்னர், இரண்டு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள மலிவு விலை உணவுக் கடைகளும், விலைகளோடு உணவு வகைகளின் பட்டியலும் இணையதளத்தில் இடம்பெறும்.

இது தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி குடியிருப்பாளர்களுக்கும் பெரிதும் உதவும். அத்துடன், வரும் நாட்களில் இந்த இணையதளத்தில் இணையும் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.