சோவா சூ காங்கில் தீ விபத்து: சுமார் 40 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

Fire breaks out in Choa Chu Kang
SCDF

சோவா சூ காங் HDB எஸ்டேட்டில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அங்கிருந்து சுமார் 40 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இன்று (மே 26) காலை 10 மணியளவில் பிளாக் 803 கீயட் ஹாங் குளோஸில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து SCDF படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

வேலையிடத்தில் விபத்து… லிப்ட், இயந்திரத்தில் சிக்கி இரு ஊழியர்கள் மரணம்

இந்த தீ, நான்காவது மாடியில் அமைந்துள்ள வீட்டின் சமையலறையில் பற்றியதாக சொல்லப்பட்டுள்ளது.

இதன் விளைவாக மீதமுள்ள வீடுகளுக்கும் வெப்பம் பரவியதாகவும், சேதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 குடியிருப்பாளர்கள் SCDF படையால் வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

துவாஸில் 33 வயதான ஊழியர் மீது கனரக வாகனம் மோதி விபத்து