ஜூரோங் வெஸ்டில் தீ – ஒருவர் மரணம், ஒருவருக்கு காயம்

PMD fire at Jurong West flat
(Photo: Facebook/SCDF)

ஜூரோங் வெஸ்டில் வீட்டுவசதி வாரியத் கழகத்தில் உள்ள ஒரு பிளாட்டில் இன்று (அக்டோபர் 8) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் இறந்தார், மேலும் ஒருவர் காயமடைந்தார்.

அதிகாலை 2.25 மணியளவில் பிளாக் 978 ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 93ல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டதாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.

லிட்டில் இந்தியாவில் உள்ள தேக்கா ஈரச்சந்தை, உணவங்காடி நிலையம் மூடல்

இதில், குடியிருப்பின் வெளியே ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பின்னர் SCDF வந்தவுடன், தீயானது 5வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் உள்ளே ஏற்பட்டதை பார்க்க முடிவதாக அது கூறியது.

அதனை தொடர்ந்து, SCDF தீயணைப்பு வீரர்கள் சுவாசக் கருவிகளை அணிந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில், அவர்கள் ஒரு படுக்கையறைக்குள் வலுகட்டாயமாக நுழைந்து, இரண்டு நபர்களை பாதுகாப்பாக மீட்டனர்.

தீ படுக்கையறையில் ஏற்பட்டதாகவும், நீர் ஜெட் கருவி மூலம் அது அணைக்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்கத்து குடியிருப்புகளில் இருந்து சுமார் 60 பேரை போலீசார் வெளியேற்றினர்.

பாதிக்கப்பட்ட படுக்கையறைக்குள் காணப்பட்ட ஒருவர், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்பதை துணை மருத்துவர்கள் உறுதி செய்தனர் .

SCDF வருவதற்கு முன்பு வெளியேறிய மற்றொரு குடியிருப்பாளர் தீக்காயங்களுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், PMD சாதனத்திலிருந்து தீ ஏற்பட்டிருப்பதாக SCDF தெரிவித்துள்ளது.

மனக் கவலையைத் தவிர, வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை