லிட்டில் இந்தியாவில் உள்ள தேக்கா ஈரச்சந்தை, உணவங்காடி நிலையம் மூடல்

Tekka Centre
Tekka Centre Google Street View

லிட்டில் இந்தியாவில் உள்ள தேக்கா ஈரச்சந்தை மற்றும் உணவங்காடி நிலையம் முழுமையான துப்புரவுப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது.

தேக்கா நிலையத்தின் முதல் தளம் மட்டும், இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 8) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கிருமிநீக்கம் செய்ய மூடப்படும்.

மனக் கவலையைத் தவிர, வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை

அங்கு கோவிட்-19 நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்ட பின்னர், அது மூடப்படுவதாக தஞ்சோங் பாகர் GRCயின் MP திரு. ஆல்வின் டான் பேஸ்புக்-ல் தெரிவித்தார்.

மேலும், திரு டான் பேஸ்புக் பதிவில் கூறுகையில், கடந்த சில மாதங்களாக தேக்கா நிலையத்தில் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை அமல்படுத்துவது முடுக்கிவிடப்பட்டுள்ளது, என்றார்.

அங்கு, கடை உரிமையாளர்கள் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்வதால், அவர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டாலும், கடுமையான விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அங்குள்ள கடை உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில் கிருமித்தொற்றுக்கான விரைவு பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு உடல்நல ஆரோக்கியம் போலவே “மனநல ஆரோக்கியம்” முக்கியம்