Incense burner குப்பைத்தொட்டில் தீ: காவல்துறைக்கு அழைப்பு விடுத்த குடியிருப்பாளர்கள்!

fire hazard Police
Stomp

Incense burner குப்பைத்தொட்டில் தீ ஏற்பட்டதை அடுத்து, குடியிருப்பாளர்கள் காவல்துறைக்கு அழைப்பு விடுத்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 2) காலை 11.30 மணியளவில் பிளாக் 612 ஆங் மோ கியோ அவென்யூ 4இல் உள்ள லிப்ட் அருகே அந்த குப்பைத்தொட்டியைக் கண்டதாகவும், அதன் பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாகவும் ஸ்டாம் நிரூபர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நாகூர் கந்தூரி விழா: சிங்கப்பூரில் இருந்து நாகூர் பறந்த “சிறப்புக்கொடி”

மேலும், அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ள நிரூபர், இந்த தீ ஆபத்தானது என்றும், பாதசாரிகளுக்கு பாதுகாப்பற்றது என்றும் விளக்கினார்.

பின்னர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​ ஏற்கனவே அந்த குப்பைத்தொட்டி லிப்டிலிருந்து மேலும் நகர்த்தப்பட்டிருந்ததை கண்டனர்.

பின்னர் குப்பைத்தொட்டி புல்வெளிக்கு நகர்த்தப்பட்டு, ஆபத்து தவிர்க்கப்பட்டது.

பரப்பரப்பாகும் கோவை விமான நிலையம்: ஒரே நாளில் 25 விமான சேவை.. சிங்கப்பூருக்கு நேரடி விமானம்!