தீமிதித் திருவிழாவையொட்டி, மேள தாளங்களுடன் ஸ்ரீ மாரியம்மன் கோயில் வெள்ளி தேர் உலா!

தீமிதித் திருவிழாவையொட்டி, மேள தாளங்களுடன் ஸ்ரீ மாரியம்மன் கோயில் வெள்ளி தேர் உலா!
Photo: HEB

 

சிங்கப்பூரில் உள்ள சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple). இது சிங்கப்பூரின் ஆக பழமையான கோயில் ஆகும். இந்த கோயிலில், ஆண்டுதோறும் தீமிதித் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டிற்கான் தீமிதித் திருவிழா, கடந்த ஆகஸ்ட் மாதம் 21- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விமான டிக்கெட்டுகளின் விலை உச்சம்.. சீனப் புத்தாண்டுக்கு 3 மாதங்கள் இருக்கும்போதே சூடுபிடிக்கும் புக்கிங்

தீமிதித் திருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின், முக்கிய நிகழ்வான வரும் நவம்பர் 05- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தீமிதித் திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. தீக்குழியில் இறங்கி, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக, ஏராளமான பக்தர்கள் முன்பதிவுச் செய்துள்ளனர்.

தீமிதித் திருவிழாவையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயில் களைகட்டியது. இந்த நிலையில், இன்று (நவ.03) மாலை 06.00 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் கோயில் வெள்ளி தேர் உலா மேள தாளங்களுடன் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் வெள்ளி தேரில் அமர்ந்த படி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சிங்கப்பூர் – சென்னை இடையே தினசரி விமான சேவை – நவ.5 முதல் தொடக்கம்

இந்த தேர் எவெர்டன் பார்க் (Everton Park), முன்னாள் அருள்மிகு வேல் முருகன் கோயில் (Former Arulmigu Vel Murugan Temple) (புளோக் 141, 142), ஜலான் புக்கிட் மேரா (Jalan Bukit Merah), புக்கிட் புர்மி (Bukit Purmei) புளோக் 109, டெலோக் பிளாங்கா ரிஸ் (Telok Blangah Rise) புளோக் 29 ஆகிய இடங்களில் நின்றது. அப்போது, பக்தர்கள் தேங்காய் மற்றும் பழங்களை வைத்து வழிபாடு நடத்தினர்.

வெள்ளி தேர் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில், அது பக்தர்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.