விமான டிக்கெட்டுகளின் விலை உச்சம்.. சீனப் புத்தாண்டுக்கு 3 மாதங்கள் இருக்கும்போதே சூடுபிடிக்கும் புக்கிங்

travel-to-malaysia-cny-2024
Pic: File/TODAY

சீனப் புத்தாண்டுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில், பலர் ஏற்கனவே தங்கள் பயணத் திட்டங்களை போடத் தொடங்கியுள்ளனர்.

அதற்கு முன்பாகவே, சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கான விமான டிக்கெட்டுகளின் விலை சட்டென்று உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டினருக்கு மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை

அதாவது, சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூருக்கு செல்ல பட்ஜெட் விமானத்தில் கூட ஒரு டிக்கெட் S$600க்கு மேல் வருவதாக சொல்லப்பட்டுள்ளது.

அதே போல, ஜெட்ஸ்டார் ஏசியா விமானத்துக்கும் தேவை மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

சீனப் புத்தாண்டு என்பது அதிகமானோர் பயணிக்கும் ஓர் பயணக் கால கட்டமாகும் என ஜெட்ஸ்டார் கூறியுள்ளது.

சீனப் புத்தாண்டு அடுத்த 2024 ஆம் ஆண்டின் நீண்ட வார இறுதி விடுமுறையில் வருகிறது.

சிங்கப்பூரில் சம்பளத்தை உயர்த்த 72 சதவீத முதலாளிகள் திட்டம் – ஆய்வு