சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் இரு நாட்களில் இரண்டு தீ சம்பவங்கள்

Fires at Pasir Ris Tampines
Shin Min Daily News

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் இரண்டு நாட்களுக்குள் 2 தீ சம்பவங்கள் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

முதல் சம்பவம்

கடந்த அக். 8 அன்று பிற்பகல் 2.15 மணியளவில் பாசிர் ரிஸ் இண்டஸ்ட்ரியல் டிரைவ் 1ல் தீ விபத்து ஏற்பட்டது.

ரயில் நிலைய ஊழியரோடு சண்டை.. வெளிநாட்டு ஊழியருக்கு அபாரதம், சிறை

இந்த தீ விபத்து தோராயமாக இரண்டு கால்பந்து மைதானங்களின் அளவில் ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியுள்ளது.

அதன் பின்னர், தண்ணீர் பீச்சியடிக்கும் மூன்று இயந்திரங்கள் மூலம் அந்த தீ அணைக்கப்பட்டது.

அதில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இரண்டாவது சம்பவம்

கடந்த அக். 9 அன்று  மாலை 4.35 மணியளவில், தெம்பனீஸ் Eco Green பார்க்கில் தீ விபத்து ஏற்பட்டது.

அதன் பின்னர் விரைந்து வந்த SCDF வீரர்கள், ஒரு மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Source: Photo via Shin Min Daily News

மேலும் இந்த தீ சம்பவத்திலும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

இரண்டு தீ சம்பவம் குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன.

10வது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்..