ஆசிய விளையாட்டு- வெண்கலப் பதக்கம் வென்று அசத்திய சிங்கப்பூர் வீராங்கனை!

ஆசிய விளையாட்டு- வெண்கலப் பதக்கம் வென்று அசத்திய சிங்கப்பூர் வீராங்கனை!
Photo: Team Singapore

 

 

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீனா நாட்டின் ஹாங்சோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (செப்.25) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற வூஷு போட்டியில் கலந்து கொண்ட சிங்கப்பூர் வீராங்கனை கிம்பர்லி ஓங் (Kimberly Ong), வெண்கலம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

கட்டுமான தளத்தில் 2ம் உலகப் போர் வெடிகுண்டு கண்டெடுப்பு.. குடியிருப்பாளர்கள், ஊழியர்கள் காலி செய்ய வலியுறுத்தல்

அத்துடன், சிங்கப்பூரின் பதக்க வேட்டையையும் தொடங்கி வைத்துள்ளார். சிங்கப்பூர் வீராங்கனை கிம்பர்லி ஓங்-க்கு அமைச்சர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018- ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூர் அணி 4 தங்கம், 4 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 22 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

‘பாயசம், வடையுடன் வாழை இலையில் சைவ விருந்து’- வயிறார சாப்பிட்ட வெளிநாட்டு ஊழியர்கள்!

2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், சிங்கப்பூருக்காக முதல் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தப் பெருமையை கிம்பர்லி ஓங் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.