கட்டுமான தளத்தில் 2ம் உலகப் போர் வெடிகுண்டு கண்டெடுப்பு.. குடியிருப்பாளர்கள், ஊழியர்கள் காலி செய்ய வலியுறுத்தல்

WWII bomb in Upper Bukit Timah successfully destroyed
Photo: SPF, Yi Zhou

அப்பர் புக்கிட் திமா சாலையில் உள்ள கட்டுமான தளத்தில் இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதையுண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட அதன் எடை 100 கி.கி இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

“நீங்கள் இந்தியா.., நீங்கள் மிக மோசமானவர்”- சிங்கப்பூரில் இனவாத கருத்துக்களை கூறிய வாடகை கார் ஓட்டுநர்

நாளை (செப். 26), சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மூலம் அது செயலிழப்பு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பர் புக்கிட் திமா பகுதிகளில் வசிக்கும் மற்றும் வேலை செய்யும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் கட்டிடங்களை காலி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயலிழப்பு நடவடிக்கை நாளை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கும் என்றும், அதனை எளிதாக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள சில சாலைகள் மூடப்படும் என்றும் காவல்துறை ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அப்போது குடியிருப்பாளர்கள், கடைக்காரர்கள் மற்றும் அருகிலுள்ள பள்ளிகள் தங்கள் கட்டிடங்களை காலி செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியைச் சுற்றி சுமார் 200 மீட்டர் சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என்றும் அது கூறியது.

இடங்களை காலி செய்ய வலியுறுத்தப்பட்ட இடங்கள்

  • The Linear
  • ஹேசல் பார்க்
  • புக்கிட் 828
  • ஹேசல் பார்க் Terrace
  • பிளாக் 154 கங்சா சாலை
  • 778 முதல் 822 அப்பர் புக்கிட் திமா சாலையில் உள்ள கடைவீடுகள்
  • கிரீன்ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளி

“சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு இன்றியமையாது” – தடபுடலாக நடக்கும் ஊழியர்களுக்கு சிறப்பு விருந்து