சிங்கப்பூர், ஷாங்காய் இடையேயான ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ விமான சேவைகள் ரத்து!

Photo: Singapore Airlines Official Facebook Page

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Singapore Airlines) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சீனாவின் ஷாங்காய் (Shanghai) நகரத்தில் கொரோனா பொதுமுடக்கம் மற்றும் கடுமையான நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், சிங்கப்பூர் மற்றும் ஷாங்காய் இடையே வரும் ஏப்ரல் 11- ஆம் தேதி அன்று புறப்படவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான SQ830, SQ833 ஆகிய விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூரின் 2023ஆம் ஆண்டுக்கான “பொது விடுமுறை” நாட்களின் பட்டியல் வெளியீடு!

பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பைத் தெரிவிக்க விரும்புகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம். சேவைத் தடையால் ஏற்பட்ட இடையூறுகளை சமாளிக்க தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாகவும், பயணிகளைத் தொடர்புக் கொண்டு வருவதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு குடிபெயர நடிகர் “அஜித் குமார்” திட்டம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் https://www.singaporeair.com/en_UK/in/home என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று, சிங்கப்பூர் மற்றும் ஷாங்காய் இடையேயான விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.