உதிரி பூக்களைக் கட்டுவதற்கு ஆர்வம் காட்டிய சிங்கப்பூர் பெண்கள்!

உதிரி பூக்களைக் கட்டுவதற்கு ஆர்வம் காட்டிய சிங்கப்பூர் பெண்கள்!
Photo: Lisha

 

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா, செராங்கூன் சாலை உள்ளிட்டப் பகுதிகளில் விழாக்கோலம் பூண்டுள்ளது. முக்கிய சாலைகளில் வண்ண மின் விளக்குகளைக் கொண்ட அலங்காரம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த ஊழியருக்கு அடித்த அதிஷ்டம்.. மாதம் 5.6 லட்சம் என 25 ஆண்டுக்கு ஜாக்பாட் பரிசு

தீபாவளி ஒளியூட்டு தொடங்கப்பட்டுள்ள நிலையில், நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ‘லிஷா’ (Lisha) ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அந்த வகையில், அக்டோபர் 21- ஆம் தேதி அன்று “உதிரி பூக்களைக் கட்டுதல் மற்றும் அலங்கரித்தல் பட்டறை 2023” (Flower Tying and Decorating Workshop 2023) என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

உதிரி பூக்களைக் கட்டுவதற்கு ஆர்வம் காட்டிய சிங்கப்பூர் பெண்கள்!
Photo: Lisha

இதில் சுமார் 20- க்கும் மேற்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். பூக்களை எப்படி கட்டுவது? என்பது குறித்து பயிற்சியாளர் பயிற்சி அளிக்க, அதனைப் பின்பற்றி பூக்களைக் கட்டுவதற்கு பெண்கள் முயற்சி செய்தது, பூக்களை கட்டி மகிழ்ந்தனர். நிகழ்ச்சி முடிவில், தாங்கள் கட்டிய பூக்களுடன் குழுப் புகைப்படமாகவும், செல்பி புகைப்படமாகவும் சிங்கப்பூர் பெண்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

செந்தோசா தீவில் ஆடவரை காணவில்லை – தேடும் பணி தீவிரம்

இதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை செய்த ‘லிஷா’ தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளது. பூக்களைக் கட்டுவதற்கு சிங்கப்பூர் பெண்கள் ஆர்வம் காட்டியது, அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.