விமானத்திற்குள் தமிழில் அறிவிப்புகளை வெளியிடும் சிங்கப்பூரைச் சேர்ந்த விமான நிறுவனம்!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திக் ராமசாமி என்பவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கும் பயணிக்கும் விமான பயணிகளில் கிட்டத்தட்ட 100% தமிழர்கள். சிங்கப்பூரைச் சேர்ந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் (Scoot Airlines) அவர்களுடைய விமானத்திற்குள் அறிவிப்புகளை தமிழில் பேசுகிறார்கள்.

மசூதிகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் பேரீச்சம் பழங்களை வழங்கியது இந்து அறக்கட்டளை வாரியம்!

இந்தியாவைச் சேர்ந்த அனைத்து விமான நிறுவனங்களும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவுப்புகளை வெளியிடுகிறார்கள். நாம் ஏதோ பணம் கட்டாமல் ஓசியில் பயணிப்பது போல இருக்கிறது. 100% தமிழர்கள் பயணிக்கும் விமானத்தில் அறிவிப்புகள் தமிழைத் தவிர்த்து இந்தியில் என்பது ஆதிக்கத்தின் அடையாளம். இந்த பிரச்சனை பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் புதுக்கோட்டை அபதுல்லா அவர்களை கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண் உயிரிழப்பு….. இழப்பீட்டை வழங்கியது சுகாதாரத்துறை அமைச்சகம்!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம், மலிவுக் கட்டணத்தில் விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.