சிங்கப்பூரில் ஆளில்லா ட்ரான் மூலம் உணவு விநியோகம் – துரித விநியோகம் பெறலாம்..!

Foodpanda collaborates with ST Engineering on drone food delivery trials
(PHOTO: Foodpanda)

சிங்கப்பூரில் உணவு விநியோகம் மேற்கொள்ள புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

PandaFly என்றழைக்கப்படும் ஆளில்லா ட்ரான் மூலம் தொலைவான இடங்களுக்கும் உணவை விநியோகம் செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கனமழை காரணமாக கிரேக் ரோட்டில் திடீர் வெள்ளம்..!

இந்த ட்ரோன் உணவு விநியோக சோதனைகள், ST Engineering மற்றும் Foodpanda ஆகிய இரு நிறுவங்களின் கூட்டுமுயற்ச்சியில் உருவாகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களின் இந்த ட்ரோன் மூலம் விநியோகம் செய்யும் அடிப்படை விருப்பமானது, வாடிக்கையாளர்களுக்கான தேர்வை அதிகரிப்பதாகும் என்று Foodpanda சிங்கப்பூர் நிர்வாக இயக்குனர் லூக் ஆண்ட்ரியானி (Luc Andreani) கூறினார்.

பல உணவகங்கள் அமைந்துள்ள நகரத்திலிருந்து, மோட்டார் சைக்கிள் மூலம் முக்கிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கும்போது, ​​அது அதிக நேரம் எடுக்கும், இது உணவின் தரத்தை பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

எந்த தடங்கலும் இல்லாமல், PandaFly தீவு முழுவதும் உணவு விநியோகிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கான சோதனை முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. 2 கிகி எடைகொண்ட உணவை தூக்கி செல்லும் திறன் கொண்டது, இதனால் 5 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கமுடியும்.

இந்த விநியோக செயல்முறையை பாதுகாப்பாக மேற்கொள்ள தற்போது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதையும் படிங்க : சில தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் வெளியே செல்வதற்கான நிபந்தனைகள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg