“மலேசியா கோப்பை நட்சத்திரம்”, சிங்கப்பூரின் முன்னாள் தேசிய கால்பந்து வீரர் “மாட் நோ” காலமானார்

Football Malaysia Cup star Mat Noh death
(PHOTO: Rahima Rahim/Facebook)

சிங்கப்பூரின் முன்னாள் தேசிய கால்பந்து வீரர், 67 வயதான முகம்மது நூஹ் ஹுசேன் இன்று காலை (செப்டம்பர் 20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1970களில் பல சிங்கப்பூரர்களின் வீட்டின் பெயராக இருந்த அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மாரடைப்பால் அவதிப்பட்டார்.

ஊழியர்களுக்குக் கையில் அணிந்துக் கொள்ள பட்டைகள் – பாெருள் வாங்க கட்டணக் கழிவு!

அதன் பின்னர், அவர் செங்காங் பொது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருந்தார் என்பது அறிந்து கொள்ள முடிகிறது.

1977ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் புகழ்பெற்ற மலேசியா கோப்பையை வென்ற அணியின் வீரராக “மாட் நோ” இருந்தார்.

சிங்கப்பூர் கால்பந்து சங்கம், அவரின் திறமை மற்றும் சாதனையை நினைவு கூர்ந்து, மாட் நோவுக்கு பேஸ்புக் பதிவில் அஞ்சலி செலுத்தியுள்ளது.

“இந்த கடினமான நேரத்தில் அவருடைய குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்” என்றும் அது கூறியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் முதல் தொகுதி லிட்டில் இந்தியா சென்றனர் – எந்த விடுதியில் இருந்து தெரியுமா?