சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடம் ₹7½ லட்சம் பணம் மோசடி

Singapore Shell companies linked money laundering operation India

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக இந்திய மதிப்பில் ரூ.7½ லட்சம் மோசடி செய்த நபர்களை தமிழக காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வெளிநாட்டில் வேலை தேடிக்கொண்டிருந்த, புதுச்சேரி வாழைக்குளம் நகராட்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்த 22 வயதான பழனிவேல் என்பவர் இதில் ஏமாற்றப்பட்டுள்ளார்.

வேலைக்காக வேண்டி, சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் புதுவை சின்னையாபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் பழனிவேல்.

கட்டுப்பாடு தளர்வுகள் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே..!

அதனை அடுத்து, சென்னையை சேர்ந்த அவரின் நண்பர் திலீப் என்பவரை தொடர்பு கொள்ளுமாறு சரவணன் கூறியுள்ளார்.

பின்னர், பழனிவேல் திலீப்பிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரும் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக உறுதி கூறியுள்ளார்.

பழனிவேல் மட்டுமல்லாது, அவரின் 2 உறவினர்களும் வேலைக்காக திலீப்பிடம் தொடர்பு கொண்டனர்.

அதை அடுத்து, 3 பேரிடம் சுமார் ரூ.7,40,000 வாங்கிக்கொண்டு விமான டிக்கெட், விசா ஆகியவை அளித்துள்ளார். ஆனால் அவைகள் போலி என்பது பின்னர் தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த பழனிவேல், திலீப்பை தொடர்பு கொண்டு இழந்த பணத்தை திருப்பி கேட்க, அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுபறி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் பழனிவேல், இந்த மோசடி குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதில் திலீப், சரவணன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கூடைப்பந்து உலோக அமைப்பு விழுந்ததில் இளையர் மரணம்